

ஹெட்டிங்லியில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கி லாந்து அணி முதல் நாளில் 5 விக் கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டத்தில் 53 ஓவர்களே வீசப் பட்டது. 83 ரன்களுக்கு 5 விக்கெட் கள் சரிந்த நிலையில் ஹெல்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி அணி யை முன்னெடுத்துச்சென்றது. நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இருவரும் தொடர்ந்தனர்.
ஹெல்ஸ் 206 பந்தில் 12 பவுண்டரிகளுடன் 86 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 224 ஆக இருந்தது. இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோவ் 145 பந்தில் சதம் அடித்தார். இது அவருக்கு 2-வது சதமாக அமைந்தது.
264 பந்தில், 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் பேர்ஸ்டோவ் 140 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்கள வீரர்களான மொயின் அலி 0, கிறிஸ் பிராடு 2, ஸ்டீவன் பின் 17 ரன்களில் நடையை கட்ட 90.3 ஓவரில் இங்கிலாந்து 298 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆண்டர்சன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை தரப்பில் துஸ்மந்தா ஷமீரா, ஷனகா தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து இலங்கை முதல் இன்னிங்சில் பேட் செய்ய தொடங்கியது.