Last Updated : 09 May, 2016 09:28 AM

 

Published : 09 May 2016 09:28 AM
Last Updated : 09 May 2016 09:28 AM

தொடர் தோல்வியால் கவலை இல்லை: குயிண்டன் டி காக் கருத்து

ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் பஞ்சாப் அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியடைந்தது. இதற்கு முந்தைய ஆட்டத்தில் புனே அணியிடமும் டெல்லி தோல்வியை சந்தித்திருந்தது.

பஞ்சாப் அணிக்கு எதிராக 182 ரன்கள் இலக்குடன் விளை யாடிய டெல்லி அணிக்கு கடைசி 6 ஓவர்களில் வெற்றிக்கு 54 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், மார்கஸ் ஸ்டாய்னிஸ், சந்தீப் சர்மா, மோஹித் சர்மா ஆகியோர் இறுதிக்கட்ட ஓவர் களை மிக துல்லியமாக வீசி டெல்லி அணியின் வெற்றிக்கு தடை போட்டனர்.

மோஹித் சர்மா ஆட்டத்தின் கடைசி பகுதியில் 2 ஓவர்களில் 7 ரன்களையே விட்டுக் கொடுத் தார். அதிரடி வீரர்களான பிராத் வெய்ட், கிறிஸ் மோரிஸ் ஆகி யோர் களத்தில் இருந்த போதும் வேகம் குறைந்த லெக் கட்டர்கள், வேகமான ஷார்ட் பிட்ச் பந்துகள் மற்றும் யார்க்கர்கள் ஆகியவற்றால் டெல்லி வீரர்கள் ரன் சேர்க்க திணறினர்.

முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்து டெல்லி அணி தோல் வியை தழுவியது. 9 ஆட்டத்தில் விளையாடி உள்ள டெல்லி அணி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

இந்த தோல்வி தொடர்பாக டெல்லி அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் கூறும் போது, "தொடர்ச்சியான இரு தோல்விகளால் எந்த கவலை யும் இல்லை. இன்னும் எங்க ளுக்கு போதுமான ஆட்டங் கள் உள்ளன. நிச்சயம் நாங் கள் வெற்றிப்பாதைக்கு திரும்பு வோம்.

எங்களது பீல்டிங் மோச மாக இருந்தது. இறுதி கட்ட ஓவர்களில் மோஹித் சர்மா, சந்தீப் சர்மா சிறப்பாக செயல்பட்டனர். இதுவே எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x