

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் கிளாசிக்கல் பிரிவின் 8-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி அடைந்தார்.
நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் தனது 8-வது சுற்றில் அஜர்பைஜானின் ஷக்ரியார் மமேதியரோவை எதிர்கொண்டார்.
இதில் 22 நகர்த்தலின் போது விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். இந்த தோல்வியால் 13 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார் விஸ்வநாதன் ஆனந்த்.
அதேவேளையில் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், பிரான்ஸின் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவை தோற்கடித்து 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஷக் ரியார் மமேதியரோவ் 14.5 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறார்.