Published : 09 Jun 2022 06:22 AM
Last Updated : 09 Jun 2022 06:22 AM

கோவில்பட்டி | மாநில கைப்பந்து போட்டிகள்: மதுரை, தாயில்பட்டி அணிகள் வெற்றி

எட்டயபுரம் அருகே படர்ந்தபுளியில் நடந்த மாநில கைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற மதுரை அமெரிக்கன் கல்லூரி அணிக்கு கனரா வங்கி சுழற்கோப்பையும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே படர்ந்தபுளியில் நடந்த மாநில கைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில்மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும், ஆண்கள் அணியில் தாயில்பட்டி அணியும் வெற்றிபெற்றன.

எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தில் லியா கைப்பந்து கழகம்மற்றும் கனரா வங்கி சார்பில் 17-வது ஆண்டு மாநில அளவிலானஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டிகள் நடந்தது. கனரா வங்கி மண்டல உதவி பொது மேலாளர் ஜக்கலா சுரேந்திர பாபு தலைமை வகித்தார். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் பிரிவில் 16 அணிகள், ஆண்கள் பிரிவில் 25 அணிகள் என மொத்தம் 41 அணிகள் கலந்து கொண்டன. ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் தாயில்பட்டி கைப்பந்து கழக அணிமுதலிடத்தை பிடித்தது. 2-ம் இடத்தை திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியும், 3-ம் இடத்தை படர்ந்தபுளி லியா கைப்பந்து கழகஅணியும், 4-ம் இடத்தை அருப்புக்கோட்டை பீனிக்ஸ் கைப்பந்து கழக அணியும் பிடித்தன.

பெண்கள் பிரிவில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி முதலிடத்தை பிடித்தது. 2-ம் இடத்தை மதுரை லேடி டோக் கல்லூரி அணியும், 3-ம் இடத்தை மங்கலம் செயின்ட் மேரிஸ் கைப்பந்தாட்டம் கழக அணியும், 4-ம் இடத்தை பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரி கைப்பந்து கழக அணியும் பெற்றன.

கனரா வங்கி மண்டல மேலாளர் ரவீந்திர ஜேம்ஸ், மருத்துவர் விஜய், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ஜான் வசீகரன், செயலாளர் ரமேஷ் குமார், முன்னாள் இந்திய கைப்பந்து வீரர் மங்கலஜெயபால், உடற்கல்வி இயக்குநர்கள் ஹரிஹர ராமச்சந்திரன், ஆல்ட்ரின், அதிசயராஜ், மாரி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை லியா கைப்பந்து கழகம் மற்றும் படர்ந்தபுளி கிராம மக்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x