மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிக்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிக்
Updated on
1 min read

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி யின் 3-வது சுற்றுக்கு செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிக் தகுதி பெற்றுள்ளார்.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட் டிகள் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன் தினம் நடந்த 2-வது சுற்றுப் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிக் குரோ ஷியாவின் போர்னா கோரிக் கை எதிர்த்து ஆடினார். இப்போட் டியில் ஜோகோவிக் 6-2, 6-4 என்ற நேர்செட்களில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதிபெற்றார். 3-வது சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ராபெர்டோ படிஸ்டா அகட்டை எதிர்த்து அவர் ஆடவுள்ளார். மற் றொரு போட்டியில் ஆஸ்திரேலி யாவின் நிக் கிர்ஜியோஸ் 7-6, 7-6 என்ற செட்கணக்கில் சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை வென்றார்.

பெண்களுக்கான போட்டியில் இருந்து முதுகுவலி காரணமாக விக்டோரியா அசரென்கா வில கினார். மற்றொரு போட்டியில் பெட்ரா க்விடோவாவை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலி யாவின் டாரியா காவ்ரிலோவா வீழ்த்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in