

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மகத்தான பங்கு வகித்த மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது சாதனைகளை அடுக்கியபடி அவருக்கு நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் விடைகொடுத்து வருகின்றனர்.
12 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 போட்டிகள் மற்றும் 232 ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 333 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் ஒட்டுமொத்தமாக 10,868 ரன்கள் எடுத்துள்ளார் மிதாலி ராஜ். அவரது தலைமையிலான இந்திய அணி கடந்த 2017 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் மிதாலி. மொத்தம் 7805 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த நிலையில், மிதாலியின் ஓய்வு குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அவற்றில் இருந்து...
கவுதம்:
"சச்சினுக்கு கூட சுனில் கவாஸ்கர் முன்மாதிரியாக இருந்தார்...
இங்கு மிதாலிதான் வரும் தலைமுறைக்கு முன்மாதிரியாக இருக்கப் போகிறார்."
அனாஸ்வரா:
"சிறந்த பணி... மகிழ்ச்சியாக விடைபெறுங்கள்..."
விஷால்:
"கிரிக்கெட்டுக்கு சோகமான நாள்... வட்ட வடிவ தொப்பி அணியும் சில வீரர்களில் மிதாலி ஒருவர்.. அவருடன் அந்த தொப்பியும் விடைபெறுகிறது..."
அருண்:
"மிதாலி வெறும் கிரிக்கெட்டர் மட்டும் அல்ல...
அவர் அனைவருக்கும் முன் மாதிரி..."
ரங்கசாமி:
"வலி மிகுந்த நாள்.. ஆனால் 23 வருடங்கள் இந்திய மகளிர் அணிக்கு சிறப்பாக பங்காற்றினீர்கள். உங்களை களத்தில் நிச்சயம் மிஸ் செய்வேன்."
திராஜ் பவார்:
"இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனுக்கு வாழ்த்துகள். நீங்கள் இந்திய மகளிர் அணியை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்து சென்றீர்கள்... உங்களுடைய இரண்டாவது இன்னிஸ்ஸுக்கு வாழ்த்துகள்."
MSD"
"Happy Retirement our Captain"
Vishwajit:
"23 ஆண்டுகள் நீண்ட பயணம் முடிவுக்கு வருகிறது."