

மகளிர் இரட்டையர் டென்னிஸ் உலகத் தரவரிசையில் சானியா மிர்சா 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதுதான் அவர் வகிக்கும் உயர்ந்த தரநிலையாகும். பிரெஞ்ச் ஓபன் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு சானியா-காரா பிளாக் ஜோடி முன்னேறியது.
இதனையடுத்து 430 தரவரிசைப்புள்ளிகளை இருவரும் பெற்றனர். இதனால் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறினர்.
இது குறித்து சானியா மிர்சா கூறுகையில், “இந்த ஆண்டு ஜனவரியில் சீசனை நான் துவங்கியபோது எனது முதல் குறிக்கோள் தரவரிசையில் முன்னேறுவது என்பதாகவே இருந்தது. இன்று அதனை சாதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது”
சானியாவின் தந்தை இம்ரான் மிர்சா, “இந்த சீசனில் சானிய மிகவும் சீரான முறையில் ஆடி வருகிறார். அதற்கான பரிசு கிடைத்துள்ளது, மேலும் முன்னேறும் திறமையும் அவரிடம் உள்ளது” என்று கூறினார்.
பிரெஞ்ச் ஓபன் காலிறுதியில் சானியா-காரா பிளாக் ஜோடி ஷுவாய் பெங், சூ-வீ சியே ஜோடியிடம் தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.