Published : 05 Jun 2022 10:30 PM
Last Updated : 05 Jun 2022 10:30 PM

பிரெஞ்சு ஓபன் | 14-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நடால்

ரஃபேல் நடால்.

பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ரஃபேல் நடால். இதன் மூலம் பிரெஞ்சு ஓபனில் அதிக முறை பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 14 முறை இந்த தொடரில் பட்டத்தை அவர் வென்றுள்ளார்.

36 வயதான நடால், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் மொத்தம் 22 முறை பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். டென்னிஸ் உலகில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் நடால். பிரெஞ்சு ஓபன் தொடரை 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020, 2022 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளார் நடால். அதனால் களிமண் களத்தின் மன்னன் என அவர் போற்றப்படுகிறார்.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அவர் பட்டம் வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடைபெற்ற காலிறுதியில் ஜோகோவிச்சை வீழ்த்தி இருந்தார் நடால்.

நடப்பு பிரெஞ்சு ஓபன் தொடரில் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை (Casper Ruud) எதிர்கொண்டார் நடால். 2 மணி நேரம் மற்றும் 18 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நேர் செட் கணக்கில் ஆட்டத்தை வென்றார் நடால். 6-3, 6-3, 6-0 என வெற்றி பெற்றிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x