Published : 05 Jun 2022 05:10 AM
Last Updated : 05 Jun 2022 05:10 AM
ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் கிளாசிக்கல் பிரிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 4-வது சுற்றில் தோல்வியடைந்தார்.
நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் தனது 4-வது சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லி சோ-வை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டம் 28-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் ‘சடன் டெத்’ ஆட்டத்தில் 46-வது நகர்த்தலின் போது விஸ்வாதன் ஆனந்தை, வீழ்த்தினார் வெஸ்லி சோ.
இதன் மூலம் இந்தத் தொடரில் ஆனந்தின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. அவர், முதல் 3 சுற்றுகளிலும் வெற்றி கண்டிருந்தார். 52 வயதான ஆனந்த் 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். மேக்னஸ் கார்ல்சன் தனது 4-வது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை வீழ்த்தி முழுமையாக 3 புள்ளிகளை பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT