Published : 04 Jun 2022 01:09 PM
Last Updated : 04 Jun 2022 01:09 PM

ஜெர்லின் அனிகா, பிரித்வி சேகருக்கு ரூ.1.10 கோடி ஊக்கத் தொகையை முதல்வர் வழங்கினார்

சென்னை: கோடைக்கால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.1.10 கோடி ஊக்கத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பிரேசில் நாட்டில் 24-வது கோடைக்கால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி கடந்த மே 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா (18) இறகுப் பந்து போட்டியில் பங்கேற்று ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் குழுப் போட்டி ஆகியவற்றில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இவருக்கு முதல்வர் ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை வழங்கினார்.

மேலும், ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குபெற்ற சென்னையைச் சேர்ந்த பிரித்வி சேகர் (39) இரட்டையர் பிரிவில் 1 வெள்ளிப் பதக்கமும், ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் 2 வெண்கலப் பதக்கங்களும் என 3 பதக்கங்களை வென்றுள்ளார். இவருக்கு முதல்வர் 35 லட்சம் ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x