Published : 04 Jun 2022 06:54 AM
Last Updated : 04 Jun 2022 06:54 AM

நார்வே செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்துக்கு 3-வது வெற்றி

ஸ்டாவஞ்சர்: இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் நார்வே செஸ் போட்டியின் கிளாசிக்கல் பிரிவு 3-ம் சுற்றில் சீனாவின் வாங் ஹாவை தோற்கடித்தார்.

52 வயதான ஆனந்த், வாங் ஹா மோதிய ஆட்டம் 39-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து ‘சடன் டெத்’ முறையில் நடத்தப்பட்ட ஆட்டத்தில் ஆனந்த் 44-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.

இந்தத் தொடரில் ஆனந்த் தொடர்ச்சியாக பெறும் 3-வது வெற்றி இதுவாகும். அவர், முதல் இரு சுற்றுகளில் பிரான்ஸின் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ், பல்கேரியாவின் வெசெலின் டோபலோவை தோற்கடித்திருந்தார். அமெரிக்காவின் வெஸ்லி சோ 6 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 5.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x