

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான ரோலர் ஸ்கேட் டிங் போட்டிகளில் சென்னையைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் வெற்றி பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நேற்று தொடங்கின. சென்னை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். முதல்கட்டமாக ஆறு வயதுக்குட்பட்ட பிரிவு, எட்டு வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
ஆறு வயதுக்குட்பட்ட 150 மீட்டர் ஆண்கள் பிரிவில் திருப்பூரைச் சேர்ந்த செல்வின்ஷாம் முதலிடம் பெற்றார். சென்னையைச் சேர்ந்த தருண் இரண்டாமிடமும், இம்ரான் அலி மூன்றாமிடமும் பெற்றனர். பெண்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ஆர்த்திகா முதலிடம் பெற்றார்.
சென்னையைச் சேர்ந்த பிர திக்ஷா, லக்ஷா ஆகியோர் முறையே இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பெற்றனர். 6 முதல் 8 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் முதலிடமும், ஈரோட்டைச் சேர்ந்த தர்ஷன் இரண்டாம் இடமும், சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் மூன்றாம் இடமும் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் சென்னை யைச் சேர்ந்த பர்த்வர்ஷா முதலிட மும், ஆதித் இரண்டாம் இடமும் பெற்றனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சசிகா மூன்றாம் இடம் பெற்றார்.
எட்டு வயது முதல் பத்து வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவு மற்றும் பத்து வயது முதல் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவுகளில் இன்று போட்டிகள் நடைபெறுகின்றன. 12 முதல் 14 வயது மற்றும் 14 முதல் 16 வயது மற்றும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவுகளில் போட்டிகள் நாளை நடைபெற உள்ளன.