

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி வரும் மாதங்களில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை உள்ளிட்ட அணி களுடன் விளையாட உள்ளது. இந்த தொடரையொட்டி இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியை பிரபலப்படுத்தும் வித மாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி மைதானத்தில் நேற்று கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
இதில் இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியு டன், ரோட்டரி கிரிக்கெட் அணி மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சுகுனேஷ் 91 ரன் எடுத்தார். தொடர்ந்து ஆடிய ரோட்டரி அணி 183 ரன்களை சேர்த்து தோல்வியை தழுவியது.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மத்திய சென்னை ரோட்டரி சங்க தலைவர் ரவிகுமார் கோப்பை வழங்கினார். இந்திய அணியின் மேலாளார் சுமந்த் ரெட்டி, ஒருங்கிணைப்பாளர் அஸ்வர்தன் ரெட்டி கலந்து கொண்டனர்.