Published : 02 Jun 2022 08:56 PM
Last Updated : 02 Jun 2022 08:56 PM

லார்ட்ஸ் மைதானத்தில் 23-வது ஓவரில் 23 நொடிகள் ஷேன் வார்னுக்கு அஞ்சலி | ஓரணியில் நின்ற இங்கிலாந்து, நியூசி. வீரர்கள்

லண்டன்: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் 23-வது ஓவரில், அண்மையில் மறைந்த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 4-ஆம் தேதி உயிரிழந்தார் ஷேன் வார்ன். அவரது மறைவு செய்தியை அறிந்து கிரிக்கெட் உலகமே மீளா துயரத்தில் மூழ்கியது. இந்நிலையில், தற்போது லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளன.

இரு அணி வீரர்கள் மற்றும் நடுவர்கள் என களத்தில் இருந்த அனைவரும் ஒரே வரிசையில் நின்று வார்னுக்கு அஞ்சலி செலுத்தினர். போட்டியை காண வந்த ரசிகர்களும் கேலரியில் இருந்தபடி அஞ்சலி செலுத்தினர்.

ஆட்டத்தின் 23-வது ஓவரில் 23 நொடிகள் ஒதுக்கப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஷேன் வார்ன் அணிந்து விளையாடிய ஜெர்சி நம்பர் '23'. அதை குறிப்பிடும் வகையில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு உள்ளது.

கிரிக்கெட்டின் ஜாம்பவானுக்கு இந்த அஞ்சலி என தெரிவிக்கப்பட்டது. 'நூற்றாண்டின் சிறந்த பந்து' என போற்றப்படும் வார்ன் வீசிய பந்து இங்கிலாந்து மண்ணில் தான் வீசப்பட்டது.

நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்தத் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இன்று தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. இருந்தும் 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி இப்போது முதல் இன்னிங்ஸில் பேட் செய்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x