உபேர் கோப்பை பாட்மிண்டன்: இந்திய மகளிரணிக்கு 2-வது வெற்றி

உபேர் கோப்பை பாட்மிண்டன்: இந்திய மகளிரணிக்கு 2-வது வெற்றி
Updated on
1 min read

மகளிருக்கான உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் நேற்று 5-0 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.

சீனாவில் ஹூன்ஷான் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் 21-15, 21-10 என்ற நேர்செட்டில் பேபினி டிப்ரெஸையும், பி.வி.சிந்து 21-7, 21-12 என்ற கணக்கில் லூயிஸ் ஹீமையும் வீழ்த்தினர். இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 14-21, 21-9, 21-8 என்ற செட் கணக்கில் லிண்டா-லாரா ஜோடியை தோற்கடித்தது. இதனால் இந்தியா 3-0 என முன்னிலைப் பெற்றது.

அடுத்து நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ருத்விகா ஷிவானி காடே 21-5, 21-15 என்ற நேர்செட் டில் வோனியை வீழ்த்தினார். கடைசியாக நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது. ஷிக்கி ரெட்டி-பி.வி.சிந்து ஜோடி 21-18, 19-21, 22-20 என்ற செட் கணக்கில் இஸபெல் ஹர்ட்ரிச்-பிரான்ஸிஸ்கா வோல்க்மான் ஜோடியை வென்றது.

இந்திய மகளிரணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 5-0 என வீழ்த்தியிருந்தது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்த்து விளையாடுகிறது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் காலிறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேறும்.

ஆடவருக்கான தாமஸ் கோப்பை பாட்மிண்டனில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் ஹாங்காங்கிடம் தோல்வியை சந்தித்தது. ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் தாய்லாந்திடமும் தோல்வி கண்டிருந்தது. இதனால் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறும் நிலை உருவாகி உள்ளது. கடைசி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி இந்தோனே ஷியாவை சந்திக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in