

ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. லீக் சுற்றின் கடைசி நாளான இன்று இரு முக்கிய ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு கொல் கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல் கத்தா - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
காம்பீர் தலைமையிலான கொல் கத்தா அணி 13 ஆட்டத்தில் 7 வெற்றி களுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.
டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி 13 ஆட் டத்தில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ள போதிலும் பிளே ஆப் சுற்றை நெருங்க மட்டுமே செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் சிறிது சுணக்கம் ஏற்படும்.
வேறு சில அணிகளும் 16 புள்ளி களை பெறும் நிலை உள்ளதால் ரன் விகித அடிப்படையே ஐதரா பாத் அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பை முடிவு செய்வதாக அமையும்.
இதற்கிடையே புயல் சின்னம் காரணமாக கடந்த இரு தினங்களாக கொல்கத்தா முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஈடன் கார்டன் மைதான பகுதிகள் முழுவதும் கவர்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஒருவேளை மழை காரணமாக இன்றைய ஆட்டம் ரத்தானால் அது ஐதராபாத் அணிக்கு சாதகமாக அமையும்.
கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்ஸல் காயம் அடைந்துள்ளது அந்த அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள் ளது. அவர் முழு உடல் தகுதியை இன்னும் பெறாததால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது உறுதி செய்யப்படவில்லை.
இருமுறை பட்டம் வென்ற கொல்கத்தா அணி இந்த முறை ஆரம்ப கட்ட ஆட்டங்களில் சுழற் பந்து வீச்சாளர்களை கொண்டு நெருக்கடி கொடுத்தது. ஆனால் கடந்த சில ஆட்டங்களில் சுழற்பந்து வீச்சு கைகொடுக்கவில்லை. இத னால் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி அதிக ரன்களை குவிக்கும் திட்டத்துடன் கொல்கத்தா களமிறங் கக்கூடும்.
ஐதராபாத் அணியின் பேட்டிங் கில் வார்னர் ரன் குவிக்கும் இயந் திரமாக உள்ளார். அவர் இந்த தொட ரில் 7 அரை சதங்களுடன் 640 ரன் கள் குவித்துள்ளார். இன்றும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் தக்கூடும். ஷிகர் தவண், யுவராஜ்சிங் உள்ளிட்டோரும் பொறுப்பை உணர்ந்து விளையாடும் பட்சத்தில் அணி கூடுதல் வலுப்பெறும்.
வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளது அணிக்கு சிறிது பின்னடைவை உண்டாக்கி உள்ளது. இதனை டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் காண முடிந்தது. இதனால் முஸ்டாபிஸூர் ரஹ்மான், பரிந்தர் ஷரண், புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.