

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் நடைபெற்ற தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் தங்கப் பதக்கம் வென்றார்.
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் வெனிசெலியா-சானியா2022 தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 7.95 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூல்ஸ் பொம்மெரி (7.73மீட்டர்) வெள்ளிப் பதக்கமும், அதே நாட்டைச் சேர்ந்த எர்வான்கோனேட் (7.71 மீட்டர்) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
கிரீஸ் நாட்டில் நடைபெற்று வரும் போட்டிகளில் முரளி ஸ்ரீசங்கர் தொடர்ச்சியாக 2-வது தங்கம் கைப்பற்றியுள்ளார். கடந்த வாரம் கலிதியா நகரில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் 8.31 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் வென்றிருந்தார்.