வெற்றி விழாக்களில் எனக்கு நம்பிக்கை இல்லை-கம்பீர்

வெற்றி விழாக்களில் எனக்கு நம்பிக்கை இல்லை-கம்பீர்
Updated on
1 min read

ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஈடன் கார்டன் விழாக்களினால் பொதுமக்களுக்கு பெரிய இடையூறு ஏற்பட்டுள்ளது இதற்காக வருந்துகிறேன் என்று கம்பீர் கூறியுள்ளார்.

"ஐபிஎல் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் கொல்கத்தா மக்களுக்கு ஏற்படுத்திய அசௌகரியங்கள் குறித்து நான் ஏமாற்றமடைந்தேன். மேலும் கிரிக்கெட் ரசிகர்களும் சரியாக நடத்தப்படவில்லை.

விஷயங்களை மேலும் மோசமாக்கும் வகையில் அப்பாவி ரசிகர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டுள்ளது. கடவுளின் கிருபையினால் கொல்கத்தா அணி நிறைய கோப்பைகளை வெல்லட்டும். ஆனால் என்னைப்பொறுத்தவரை இதுபோன்ற விழாக்களில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை" என்றார் கம்பீர்.

ஆங்கில இணையதளம் ஒன்றில் கம்பீர் எழுதிய பத்தியில் மேலும் கூறியிருப்பதாவது:|

இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளை வெல்வதே அடுத்த இலக்கு. 1986ஆம் ஆண்டு, எனக்கு 5 வயதாக இருக்கும்போது இங்கிலாந்தில் திலிப் வெங்சர்க்கார் சதங்களை அடித்தது எனது நினைவில் இருக்கிறது. அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் செய்தியின் போது 30 வினாடிகள் வீடியோவைக் காண்பிப்பார்கள்.

1994ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு இந்திய அணி மீண்டும் சென்றபோது வானொலி வர்ணனையுடன் போட்டியின் ஹைலைட்ஸ் காண்பிக்கப்படும்.

அப்போது சச்சின் தனது முதல் சதத்தை எடுத்தது, கபில்தேவ், எடி ஹெமிங்ஸ் ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை அடித்தது எனக்குள் உத்வேகத்தை அதிகரித்தது.

இப்போது இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளை வெல்வதே என்னுடைய விருப்பம். சுனில் கவாஸ்கர் கூறுவது போல் பேட்ஸ்மென்கள், குறிப்பாக துவக்க வீரர் தனது ஆஃப் ஸ்டம்ப் எங்கு இருக்கிறது என்பதை அறிய வேண்டும் என்பார், இங்கிலாந்து பிட்ச்கள் இந்த அறிவைக் கோருவது.

என்றார் கவுதம் கம்பீர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in