Published : 26 May 2016 09:33 am

Updated : 26 May 2016 09:33 am

 

Published : 26 May 2016 09:33 AM
Last Updated : 26 May 2016 09:33 AM

தீபிகா பல்லிக்கல் வெற்றி

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஸ்குவாஸ் போட்டியில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள ஜோஸ்னா 1-8, 11-7, 6-11, 11-8 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீராங்கனையான எகிப்தின் சல்மா ஹனியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 37 நிமிடங்கள் நடைபெற்றது.


19-வது இடத்தில் உள்ள தீபிகா 11-1, 11-3, 11-3 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீராங்கனையான மலேசியாவின் லோ வீ வெர்னை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 23 நிமிடங்களில் முடிவடைந்தது.


தீபிகா பல்லிக்கல்வெற்றி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x