IPL 2022 | நாக்-அவுட்டில் வெளியேறிய லக்னோ; ராகுலை பார்த்து முறைத்த கம்பீர்? - வைரல் க்ளிக்

IPL 2022 | நாக்-அவுட்டில் வெளியேறிய லக்னோ; ராகுலை பார்த்து முறைத்த கம்பீர்? - வைரல் க்ளிக்
Updated on
1 min read

கொல்கத்தா: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நாக்-அவுட் சுற்றான எலிமினேட்டர் போட்டியில் தோல்வியைத் தழுவியதால் நடப்பு சீசனில் இருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில், அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை, கவுதம் கம்பீர் முறைத்து பார்க்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி உள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஆரம்பம் முதலே புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். இருந்தாலும் பிளே-ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக தோல்வியை தழுவி நடப்பு சீசனில் இருந்து விடை பெற்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் நடப்பு சீசனில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். பெங்களூருக்கு எதிரான போட்டியில் கடைசி வரை களத்தில் இருந்தும் அணியை அவரால் வெற்றி பெற செய்ய முடியவில்லை.

தோல்வியினால் லக்னோ அணி மிகவும் துவண்டு போயிருந்தது. அதிலும் அந்த அணியின் மென்டராக செயல்பட்டு வரும் கவுதம் கம்பீரின் ஒவ்வொரு நகர்வுகளும் இந்த சீசன் முழுவதும் கவனம் ஈர்த்து வருகிறது.

நடப்பு சீசனில் ஆட்டத்தின் முக்கியமான தருணங்களில் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சியின் வெளிப்பாடு வேற லெவல். இத்தகைய சூழலில் தொடரை விட்டு வெளியேறிய நிலையில் அவரது பக்கம் கேமராவின் கடைக்கண் பார்வை திரும்பின. அப்போது ராகுலும், கம்பீரும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த உரையாடலின் போது கம்பீர் கொஞ்சம் கோபமாக இருந்தது போல தெரிந்தது. அதுதான் இப்போது இணையவெளியில் பேசுபொருளாகி உள்ளது.

"என்ன ஒரு பார்வை", "சினம் கொண்ட சிங்கம்", "கம்பீர் நீங்கள் உங்கள் வேலையை பார்க்கலாம். ராகுல் இந்திய அணியின் எதிர்காலம்" என்றெல்லாம் சமூக வலைதள பயனர்கள் கமென்ட் கொடுத்திருந்தனர். நடப்பு சீசனில் ராகுல் 616 ரன்கள் எடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in