அகில இந்திய ஹாக்கி: பெங்களூரு, மும்பை அணிகள் வெற்றி

அகில இந்திய ஹாக்கி: பெங்களூரு, மும்பை அணிகள் வெற்றி
Updated on
1 min read

கோவில்பட்டியில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள் சார்பில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 8-வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

6-ம் நாளான நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் பெங்களூரு அணி 3- 2 என்ற கோல் கணக்கில் சென்னை தெற்கு ரயில்வே அணியை வீழ்த்தியது.

மற்ற ஆட்டங்களில் மும்பை ஆர்சிஎப் 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு கனரா வங்கி அணியையும், ஜலந்தர் சிக்னல்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை ஐசிஎப் அணியையும், கபுர்தலா ஆர்சிஎப் அணி 5-1 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா போலீஸ் அணியையும் தோற்கடித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in