Published : 25 May 2022 09:54 PM
Last Updated : 25 May 2022 09:54 PM

டி20 உலகக் கோப்பை | ரோகித்தின் சக்சஸ் ரேட்டும், பிசிசிஐ ‘சொதப்பல்’ வரலாறும் - ஒரு விரைவுப் பார்வை

நடப்பு ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபரில் ஆரம்பமாக உள்ளது. இந்தத் தொடருக்கு இந்தியா எப்படி ஆயத்தமாகி வருகிறது என்பதை பார்ப்போம்.

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி மொத்தம் 15 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அது தவிர ஆசிய கோப்பையிலும் விளையாட உள்ளது. இந்த தொடர் டி20 பார்மெட்டில் நடக்கும் என தெரிகிறது. இந்த 15 போட்டிகளில் இந்தியா கவனம் செலுத்துவது டி20 உலகக் கோப்பைக்கு வெள்ளோட்டமாக அமையும். ஆனால் அதனை அணி நிர்வாகம் செய்ததாக தெரியவில்லை என்றே தெரிகிறது.

நடப்பு ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாக கிட்டத்தட்ட 143 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதற்குள் இந்திய அணி முழுமையாக இந்த தொடருக்கு தயாராவது அவசியம். இடைப்பட்ட இந்த நாட்களில் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இந்தியா டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த 15 போட்டிகளில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் முதல் 7 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது. கேப்டன் ரோகித், விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு தென்னாப்பிரிக்க தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அயர்லாந்து தொடரிலும் அது தொடரலாம் என தெரிகிறது. எஞ்சியுள்ள தொடர்களில் சீனியர்கள் விளையாட வாய்ப்புகள் அதிகம்.

அண்மைய காலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு சர்வதேச தொடர்களில் விளையாடும் அளவுக்கு வல்லமை கொண்ட அணியாக இந்தியா வளர்ந்துள்ளது. ஆனாலும் அணியை கட்டமைப்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தடுமாறுகிறதா, தவறு செய்கிறதா, வீரர்களுக்கு ரெகுலராக வாய்ப்பு கொடுக்க மறுக்கிறதா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது.

உதாரணமாக, நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய தவானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக ஃபார்மில் இல்லாத இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது ஏன் என்று புரியவில்லை. இது போல சில தவறுகளை இந்திய அணி செய்துள்ளது. தென்னாப்பிரிக்க தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்களில் எத்தனை பேர் உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறுவார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

எதிரணி எந்த நாடாக இருந்தாலும் முழு பலத்துடன் இந்திய அணியில் ரெகுலராக இடம் பெற்று விளையாடும் வீரர்களை வைத்து விளையாடுவது தான் நெருக்கடியான தருணங்களில் அணியின் வெற்றிக்கு வித்திடும். அது உலகக் கோப்பை போன்ற தொடருக்கு நல்லதொரு அனுபவமாகவும் அமையும். அதை நிர்வாகம் செய்தாக வேண்டி உள்ளது.

கேப்டன் ரோகித்: இதுவரையில் 28 டி20 போட்டிகளில் இந்தியாவை ரோகித் வழிநடத்தி உள்ளார். அதில் 24 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ரோகித்தின் இந்த சக்சஸ் ரேட் இந்தியாவுக்கு சாதகம். உலகக் கோப்பையில் இது எந்த அளவுக்கு கைகொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டி உள்ளது.

> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x