Published : 25 May 2022 06:59 AM
Last Updated : 25 May 2022 06:59 AM
ஜகார்த்தா: ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பான் 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜப்பான் அணி சார்பில் கவாபே கோஷி இரு கோல்களும் (40 மற்றும் 56-வது நிமிடம்), நாகயோஷி கென் (15-வது நிமிடம்), ஒகா ரயோமா (49-வது நிமிடம்), யமஷகி கோஜி (54-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இந்திய அணி சார்பில் 45-வது நிமிடத்தில் ராஜ்பர் பவனும், 50-வது நிமிடத்தில் உத்தம் சிங்கும் தலா ஒரு கோல் அடித்தனர்.
நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை பாகிஸ்தானுக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடித்திருந்தது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி நாளை இந்தோனேஷியாவை எதிர்கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT