

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கான்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் லயன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மும்பை அணிக்கு வாழ்வா, சாவா போராட்டம் போன்று அமைந் துள்ளது. ஏனெனில் இந்த ஆட்டத் தில் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியும்.
இரு அணிகளுக்குமே இது தான் கடைசி லீக் ஆட்டம். குஜராத் அணி 13 ஆட்டத்தில் விளையாடி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றை நெருங் கியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் எளிதாக பிளே ஆப் சுற்றில் நுழைந்து விடும். மாறாக தோல்வியை தழுவும் பட்சத்தில் மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மும்பை அணி 13 ஆட்டத்தில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. வெற்றி பெற்றாலும் அந்த அணியின் பிளே ஆப் சுற்று கனவு உடனடியாக கைகூடுமா என்பது சந்தேகம் தான். மாறாக தோல் வியை சந்தித்தால் தொடரில் இருந்து மும்பை அணி வெளியேறும்.
மும்பை வெற்றி பெறும் பட்சத்தில் 16 புள்ளிகளுடன் குஜராத் அணி போன்று மற்ற அணி களின் முடிவுக்காக காத்திருக்கும் நிலைமைக்கு தள்ளப்படும். ஏற்கெ னவே 14 புள்ளிகளுடன் உள்ள கொல்கத்தா, பெங்களூரு அணிக ளுக்கும் தலா ஒரு ஆட்டம் எஞ்சி உள்ளது. இந்த அணிகள் மும் பையை விட ரன் விகிதம் அதிகம் வைத்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. மும்பை-குஜராத் அணிகள் இந்த தொடரில் 2-வது முறையாக மோதுகின்றன. ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வீழ்த்தியிருந்தது. இதற்கு பதிலடி கொடுத்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெறும் முனைப்பில் மும்பை அணி களமிறங்குகிறது.
கேப்டன் ரோஹித் சர்மா, அம் பாட்டி ராயுடு, பொல்லார்டு, ஜாஸ் பட்லர் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தால் வெற் றிக்கு வழிவகுக்கலாம். ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்பியதால் குஜராத் அணி உத்வேகத்துடன் உள்ளது. கொல்கத்தாவை வீழ்த்திய உற்சாகத்தில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
புனே-பஞ்சாப் மோதல்
முன்னதாக மாலை 4 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புனே- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது தான் கடைசி லீக் ஆட்டம். பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இந்த அணிகள் இழந்துவிட்டதால் ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடித்துக்கொள்வதில் போட்டி நிலவக்கூடும்.