Published : 22 May 2022 08:20 AM
Last Updated : 22 May 2022 08:20 AM
புதுடெல்லி: செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 5-வது சுற்றில் நேற்று முன்தினம் உலக சாம்பியனும் முதல் நிலை வீரருமான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார்.
ஆட்டம் டிராவை நோக்கிசென்று கொண்டிருந்த நிலையில் கார்ல்சன் தனது 40-வது நகர்வை தவறுதலாக நகர்த்தினார். இதை சாதகமாக்கி கார்ல்சனை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா. 5 சுற்றுகளின் முடிவில்16 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார். கார்ல்சன் 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். சீனாவின் வெய் யி 18 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியிலும் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT