

சஷாங்க் மனோகர் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயலர் அனுராக் தாக்கூர் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்பு செயலர் பதவி வகித்த அனுராக் தாக்கூருக்குப் பதிலாக தற்போது அஜய் ஷிர்கே பிசிசிஐ செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் பிசிசிஐ பதவிக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் அனுராக் தாக்கூர் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இவர்தான் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்பது 3 வாரங்களுக்கு முன்பே முடிவானது.
அஜய் ஷிர்கே, கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் பொருளாளர் பதவியிலிருந்து அஜய் ஷிர்கே ராஜினாமா செய்தார். ஸ்ரீனிவாசன் பிசிசிஐ தலைவராக இருந்த போது நடந்த ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் அதிருப்தி அடைந்து அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஷிர்கே செயலராக திரும்பியுள்ளார்.