காமன்வெல்த் போட்டிகள் 2022 | இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல் வெளியீடு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

பர்மிங்காம்: 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் மல்யுத்த விளையாட்டில் பங்கேற்கும் வீராங்கனைகளின் விவரம் வெளியாகியுள்ளது.

வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தியா சார்பில் மல்யுத்த விளையாட்டில் மகளிர் பிரிவில் தேர்வாகியுள்ள வீராங்கனைகளின் விவரம் வெளியாகியுள்ளது.

லக்னோவில் இதற்கான தேர்ச்சிப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. பூஜா கெலாட் (50 கிலோ எடைப் பிரிவு), வினேஷ் போகாத் (53 கிலோ), அன்ஷு மாலிக் (57 கிலோ), சாக்‌ஷி மாலிக் (62 கிலோ), திவ்யா கக்ரான் (68 கிலோ) மற்றும் பூஜா தண்டா (76 கிலோ) ஆகிய வீராங்கனைகள் வெவ்வேறு எடை பிரிவுகளின் கீழ் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் வினேஷ், சாக்‌ஷி, பூஜா தண்டா ஆகியோர் கடந்த 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in