

மும்பை: மகளிர் டி20 சேலஞ்ச் தொடருக்கான மூன்று அணிகளில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் பட்டியலை அனைத்திந்திய மகளிர் தேர்வு கமிட்டி அறிவித்துள்ளது. இந்த தொடர் வரும் 23 முதல் 28 வரையில் நடைபெறவுள்ளது.
கடந்த 2018 முதல் இந்திய கிரிக்கெட் வாரியம், மகளிர் டி20 சேலஞ்ச் தொடரை நடத்தி வருகிறது. இதனை மகளிர் ஐபிஎல் எனவும் சொல்லலாம். இந்தத் தொடரில் மொத்தம் மூன்று அணிகள் பங்கேற்று விளையாடும். ஆடவர்களுக்கு நடத்தப்படும் ஐபிஎல் லீக் தொடரில் இந்தியாவை சேர்ந்த உள்நாட்டு வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் விளையாடுவது வழக்கம். அதே போலவே இந்தத் தொடரும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொடர் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், நடப்பு தொடருக்கான மூன்று அணிகளில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் 16 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனைகளும் இந்தத் தொடரில் விளையாடுகின்றனர். புனேவில் உள்ள எம்.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் இந்தத் தொடர் நடைபெறுகிறது.
சூப்பர் நோவாஸ்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), தனியா பாட்டியா (துணை கேப்டன்), அலானா கிங், ஆயுஷ் சோனி, சந்து, டியாந்த்ரா டாட்டின், ஹர்லீன் தியோல், மேக்னா சிங், மோனிகா பட்டேல், முஸ்கன் மாலிக், பூஜா வஸ்த்ரகர், பிரியா புனியா, ராஷி கனோஜியா, சோஃபி எக்லெஸ்டோன், சுனே லூஸ், மான்சி ஜோஷி.
டிரையல் பிளேசர்ஸ்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), பூனம் யாதவ் (துணை கேப்டன்), அருந்ததி ரெட்டி, ஹெய்லி மேத்யூஸ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரியங்கா பிரியதர்ஷினி, ராஜேஸ்வரி கெய்க்வாட், ரேணுகா சிங், ரிச்சா கோஷ், எஸ். மேகனா, சைகா இஷாக், சல்மாஹர்மின், சோபியா பிரவுன், சுஜாதா மல்லிக், எஸ்.பி.போகார்கர்.
வெலாசிட்டி: தீப்தி ஷர்மா (கேப்டன்), சினே ராணா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, அயபோங்கா காக்கா, நவ்கிரே, கேத்ரின் கிராஸ், கீர்த்தி ஜேம்ஸ், லாரா வோல்வார்ட், மாயா சோனாவனே, நட்டகன் சந்தம், ராதா யாதவ், ஷிவாலி கேதார், ஷிண்டே, சிம்ரன் பகதூர், யாஸ்திகா பாட்டியா, பிரணவி சந்திரா.
இந்தத் தொடரில் சீனியர் வீராங்கனைகள் மிதாலி மற்றும் ஜூலான் கோஸ்வாமி பெயர் இடம்பெறவில்லை.