

மும்பை: தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரை புகழ்ந்துள்ளார் தோனி. அந்த வீரர் நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி, பேட்டிங் தேர்வு செய்தார். இருந்தும் சென்னை அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்கள் முடிவில் 133 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டியது.
இந்த போட்டி முடிந்ததும் தோனி பேசி இருந்தார். "நாங்கள் முதலில் பேட் செய்ய வேண்டுமென நினைத்தது சிறப்பான ஐடியா இல்லை என நினைக்கிறேன். சாய் கிஷோர் மிகவும் அற்புதமாக பந்து வீசி இருந்தார். ஆடும் லெவனில் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது அவசியம் என எண்ணுகிறேன்" என தெரிவித்துள்ளார் தோனி.
தமிழகத்தைச் சேர்ந்த 25 வயது வீரரான இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், கடந்த 2020 சீசனின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இருந்தும் அவருக்கு ஆடும் லெவன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2018-இல் ஜுனியர் சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் இடம் பிடித்திருந்தார். அடுத்த சீசனில் அவர் நெட் பவுலராக அணியில் இருந்தார். நடப்பு சீசனில் 3 கோடி ரூபாய்க்கு அவரை குஜராத் அணி ஏலத்தில் வாங்கியது. சென்னைக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார் அவர்.