ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மறைவு: மணல் சிற்பத்தின் மூலம் அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மறைவு: மணல் சிற்பத்தின் மூலம் அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்

Published on

புரி: கார் விபத்தில் உயிரிழந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு மணல் சிற்பம் வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 198 ஒருநாள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். அவர் இரு தினங்களுக்கு (மே 14) முன்னர் கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது பாணியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதற்காக ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் சைமண்ட்ஸுக்கு மணலில் சிற்பம் வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். சைமண்ட்ஸ், ஆல்-ரவுண்டர் என்பதை குறிப்பிடும் விதமாக கிரிக்கெட் பேட் மற்றும் பந்தினை அவரது உருவ சிலைக்கு பின் பக்கம் இருக்கும் படி சிற்பம் செய்துள்ளார் சுதர்சன் பட்நாயக்.

சமூக வலைத்தளத்திலும், செய்திகளிலும் இது கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in