

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு ஐதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அந்த அணி பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொஹாலியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. இதில் டாஸில் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் முரளி விஜய் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹசிம் ஆம்லாவும், முரளி விஜய்யும் களம் இறங்கினர். கடந்த சில போட்டிகளாக சிறப்பாக பேட்டிங் செய்துவரும் முரளி விஜய் நேற்று 6 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனால் அவர் அவுட் ஆனதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அதிரடியாக ஆடிய ஆம்லா, 56 பந்துகளில் 96 ரன்களை விளாசினார்.
ஆம்லாவுக்கு உதவியாக சஹா 27 ரன்களையும், குர்கீரத் சிங் 27 ரன்களையும், மில்லர் 20 ரன்களையும் எடுக்க பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது.
இதைத்தொடர்ந்து ஆடவந்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னரும் தவணும், மிக உறுதியாக வெற்றி இலக்கைத் துரத்தினர். முதல் விக்கெட் ஜோடி 8 ஓவர்களில் 68 ரன்களை எட்டியிருந்த நிலையில் ஷிகர் தவண் (25 ரன்கள்) அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து அரை சதம் எடுத்த நிலையில் வார்னர் (52 ரன்கள்) அவுட் ஆக ஐதராபாத் அணி 2 விக்கெட்டுக்கு 97 ரன்கள் என்று சற்று திணறியது.
இந்நிலையில் ஆடவந்த யுவராஜ் சிங் தனது துடிப்பான ஆட்டத்தின் மூலம் ஐதராபாத் அணியை கரைசேர்த்தார். 24 பந்து களில் 42 ரன்களைக் குவித்த அவர் ஹூடா (34 ரன்கள்) மற்றும் கட்டிங் (18 ரன்கள்) ஆகியோ ருடன் சேர்ந்து ஐதராபாத் அணியை வெற்றிபெற வைத்தார். இப் போட்டியில் 7 விக்கெட் வித்தி யாசத்தில் வென்றதன் மூலம் ஐதரா பாத் அணி பெற்றுள்ள புள்ளி களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
இன்றைய ஆட்டம்
இன்று நடைபெறும் ஆட்டத் தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்க ளூரு அணியுடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மோதுகிறது. இன் றைய போட்டியில் வெற்றிபெற் றால் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று விடும். அதேநேரத்தில் பெங்களூரு அணி இந்த தொடரில் நீடிக்க வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு அணி உள்ளது.