Published : 31 May 2016 09:50 AM
Last Updated : 31 May 2016 09:50 AM

விளையாட்டு துளிகள்: மழையால் பிரெஞ்சு ஓபன் பாதிப்பு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று முன்தினம் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 4-வது ஓற்றில் 15-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னரை 7 6,, 6 4, 6 3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டதில் ஜப்பானை சேர்ந்த 5-ம் நிலை வீரரான நிஷி கோரி 4-6, 2-6, 6-4, 2-6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் ரிச்சர்டு காஸ்கட்டிடம் தோல்வியடைந்தார். போட்டியின் 9-வது நாளான நேற்று மழை காரணமாக ஒரு ஆட்டம் கூட நடத்தப்படாமல் கைவிடப்பட்டது. பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் ஒரு நாள் ஆட்டம் முழுவம் கைவிடப்படுவது 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நடந்துள்ளது.

**********

கூடைப்பந்து அரையிறுதியில் சத்தீஸ்கர் அணி

கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளை யாட்டு அரங்கில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் நேற்று பெண்கள் பிரிவில் நடைபெற்ற ஆட்டங்களில் தெற்கு ரயில்வே அணி 80-48 என்ற புள்ளி கணக்கில் சத்தீஸ்கர் மாநில அணியையும், கேரள மின்வாரிய அணி 76-57 என்ற புள்ளி கணக்கில் செகந்திரபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன் னேறியது.

இதேபோல் சத்தீஸ்கர் மாநில அணியும், செகந்திரபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் புள்ளிகள் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

**********

பசுமையாகும் மைதானங்கள்

ரூ.100 கோடி செலவில் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் மைதானங்களை பசுமை மையமாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த வழிகாட்டுமாறு மத்திய மின்துறை மற்றும் சுற்றுச்சுழல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் நேற்று தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் மைதான மேற்கூரைகளில் சோலார் பேனல் அமைப்பது, மழை நீர் சேகப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கழிவு நீரை சுத்திகரித்து அவற்றையே மைதான பராமரிப்புக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

**********

ஜெர்மனி அணி அதிர்ச்சி தோல்வி

பெர்லின் நகரில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் ஜெர்மனி-சுலோவேக்கியா அணிகள் மோதின. இதில் ஜெர்மனி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. யுரோ கால்பந்து தொடர் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தோல்வி ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x