

ஐபிஎல் தொடரில் ‘வெளியேற்றும் சுற்றில்' இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் போட் டியை சோனி இஎஸ்பிஎன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
கொல்கத்தா அணி 2012, 2014-ல் சாம்பியன் பட்டம் வென் றிருந்தது. 2011-ல் பிளே ஆப் சுற்று வரை முன்னேறியிருந்தது. இந்த சீசனில் லீக் சுற்றில் இரு முறை ஐத ராபாத் அணியை கொல் கத்தா வீழ்த்தியிருந்தது. இது அந்த அணிக்கு சாதகமாக கருதப்படு கிறது. கேப்டன் காம்பீர் 14 ஆட்டத் தில், 5 அரை சதங்களுடன் 473 ரன்கள் சேர்த்துள்ளார். அவருடன் களமிறங்கும் தொடக்க வீரரான ராபின் உத்தப்பா 383 ரன்களும், ஆல்ரவுண்டர் யூசுப் பதான் 359 ரன்களும் எடுத்துள்ளனர்.
இளம் வீரரான மணீஷ்பாண்டே 11 ஆட்டத்தில் 212 ரன்களே சேர்த்த போதிலும் இக்கட்டான நேரத்தில் உதவுபவராக உள்ளார். காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்ஸல் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக் கூடும். கடைசி லீக் ஆட்டத்தில் ஐத ராபாத் அணியை கொல்கத்தா வீழ்த்தியதில் சுழற்பந்து வீச்சாளர் களான சுனில் நரைன், குல்தீப் யாதவ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். இந்த ஆட்டத்தில் நரைன் 3 விக்கெட்களும், குல்தீப் இரு விக்கெட்களும் கைப்பற்றி யிருந்தனர்.
ஐதராபாத் அணி கடந்த 2013-ல் பிளே ஆப் சுற்று வரை எட்டிப் பார்த்தது. இந்த சீசனில் அதிரடி வெற்றிகளை குவித்த போதிலும் வெளியூர் மைதானங்களில் கடை சியாக மோதிய இரு ஆட்டத்தி லும் தோல்வியடைந்து சரிவை சந்தித்தது.
கேப்டன் வார்னர் 14 ஆட்டத் தில் 658 ரன்கள் சேர்த்து, அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டிய லில் 2-வது இடத்தில் உள்ளார். அவருடன் இணைந்து தொடக்க வீரராக விளையாடும் ஷிகர் தவண் தொடரின் ஆரம்பத்தில் சரியாக விளையாடாவிட்டாலும் பிற்பாதியில் சிறந்த பங்களிப்பை வழங்க தொடங்கினார். ஷிகர் தவண் இதுவரை 463 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆல்ரவுண்டர்களாக யுவ ராஜ்சிங், ஹென்ரிக்ஸ் வலம் வருகின்றனர். நட்சத்திர வீரரான மோர்கன் இதுவரை குறிப்பிடும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பந்து வீச்சில் முக்கியமான கட்டத்தில் அனுபவ வீரரான ஆஷிஸ் நெஹ்ரா விலகியதால் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முஸ்டாபிஸூர் ரஹ்மான், புவனேஷ்வர் குமார், பரிந்தர் ஷரண் ஆகியோரை நம்பியே பந்து வீச்சு உள்ளது. இவர்கள் நேர்த்தியாக செயல்படும் பட்சத் தில் கொல்கத்தா அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
இன்றைய ஆட்டத்தில் தோல் வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் கால்பதிக்கும். இந்த ஆட்டம் 27-ம் தேதி டெல் லியில் நடைபெறுகிறது.