Published : 23 May 2016 10:27 AM
Last Updated : 23 May 2016 10:27 AM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு செக் நாட்டு வீராங்கனை பெட்ரா விட்டோவா தகுதிபெற்றுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரிஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான பிரிவில் நடந்த முதல் சுற்று போட்டியில் செக் வீராங்கனையான பெட்ரா விட்டோவா, மாண்டிநீக்ரோ நாட்டைச் சேர்ந்த கோவினிக்கை எதிர்த்து ஆடினார்.
இப்போட்டி யில் விட்டோவா 6-2, 4-6, 7-5 என்ற செட்கணக்கில் போராடி வென்று 2-வது சுற்றுக்கு தகுதிபெற்றார். மற்றொரு போட்டியில் ரஷ்யா வின் அனஸ்டாசியா 6-2, 6-0 என்ற நேர் செட்களில் ஸ்பெயின் வீராங்கனையான சாரா சாரிபஸை மிக எளிதாக வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT