IPL 2022 | காயம் காரணமாக நடப்பு சீசனில் சூர்யகுமார் யாதவ் விலகல்

சூர்யகுமார் யாதவ்.
சூர்யகுமார் யாதவ்.
Updated on
1 min read

மும்பை: காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகியுள்ளார் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ். இதனை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் களத்தில் விளையாடி வருபவர் சூர்யகுமார் யாதவ். அவருக்கு இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு சீசனை விட்டு வெளியேறியுள்ளார். இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது அந்த காயத்தால் அவர் சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 303 ரன்களை எடுத்தார் சூர்யகுமார் யாதவ். அவரது பேட்டிங் சராசரி 43.29. மூன்று அரை சதம் பதிவு செய்துள்ளார். முன்னதாக, நடப்பு சீசனில் முதல் சில போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. அவருக்கு ஓய்வு தேவை என்பதால் சீசனை விட்டு விலகி உள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது.

ஐபிஎல் களத்தில் 123 போட்டிகளில் விளையாடி 2644 ரன்கள் சேர்த்துள்ளார் அவர். கடந்த 2018 முதல் ஐபிஎல் அரங்கில் ரன் குவித்து வரும் பேட்ஸ்மேன் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in