ஆசிய ஸ்குவாஷ் அரையிறுதியில் இந்திய அணி

ஆசிய ஸ்குவாஷ் அரையிறுதியில் இந்திய அணி
Updated on
1 min read

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

சீன தைபேவில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் காலிறுதியில் ஆடவர் பிரிவில் குஷ் குமார், ஹரிந்தர் பால் சாந்து ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் மலேசியாவை தோற்கடித்தது. குஷ் குமார் 11-4, 11-7, 11-4 என்ற கணக்கில் மொகமது கமாலையும், ஹரிந்தர் பால் சாந்து 11-9, 11-6, 13-11 என்ற கணக்கில் இவான் யுயனையும் வீழ்த்தினர்.

இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் இலங்கையை தோற்கடித்தது. ஜோஸ்னா சின் னப்பா 11-3, 11-3, 11-7 என்ற கணக் கில் மிகிலியாவையும், தீபிகா பல் லிகல் 11-2,11-2,11-7 என்ற கணக் கில் பாத்திமாவையும், சஷிகா இங்கால் 11-7, 11-6, 11-5 என்ற கணக்கில் ஹஸூனி மால்கினியை யும் வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in