Published : 29 Apr 2022 04:25 AM
Last Updated : 29 Apr 2022 04:25 AM

சிறந்த அணியிடம் தோல்வி: ஹைதராபாத் கேப்டன் கருத்து

மும்பை: சிறந்த அணியிடம்தான் நாங்கள் தோல்வி கண்டோம் என்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

15-வது ஐபிஎல் சீசனின் 40-வதுலீக் ஆட்டம் நேற்று முன்தினம் மும்பை வான்ஹடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் ஆடியஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி கண் டது.

கடைசி ஓவரில் 4 சிக்ஸர்: கடைசி ஓவர்களில் 22 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் குஜராத் அணியின் ராகுல் தெவாட்டியாவும், ரஷித் கானும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். கடைசி ஓவரில் தெவாட்டியா ஒரு சிக்ஸரும், ரஷித் கான் 3 சிக்ஸரும் விளாசினர். ஹைதராபாத் தரப்பில் உம்ரான் மாலிக் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்த தோல்வி குறித்து ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம் சன் கூறியதாவது: வெற்றியை நெருங்கி வந்தோம்: இது ஒரு அற்புதமான கிரிக்கெட் போட்டியாக அமைந்தது. 40 ஓவர்கள் முழுவதும் சிறப்பாக இருந்தது. வித்தியாசமான ஆட்டமாக இருந்தது. நாங்கள் நெருங்கிவந்துதான் தோற்றோம். தோற்றாலும் நாங்கள் நேர்மறையாக இருக்கிறோம். சிறந்த அணியான குஜராத்திடம்தான் நாங்கள் தோல்வி கண்டுள்ளோம்” என்றார்.

பஞ்சாப் - லக்னோ

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x