IPL 2022 | கோபத்தில் கொதித்தெழுந்த முத்தையா முரளிதரன்; வைரலான வீடியோ

முத்தையா முரளிதரன்.
முத்தையா முரளிதரன்.
Updated on
1 min read

மும்பை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் கோபத்தில் கொதித்தெழும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவரது கோபத்திற்கு காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இரண்டு அணிகளும் கடைசி ஓவரில் தலா 25 ரன்கள் சேர்த்திருந்தன. குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் சார்பில் மார்க்கோ ஜான்சன் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் ராகுல் திவாட்டியா ஒரு சிக்சரும், ரஷீத் கான் மூன்று சிக்சரும் விளாசி தங்கள் அணிக்கு வெற்றி தேடி தந்தனர்.

பரபரப்பான அந்த கடைசி ஓவரில் தான் முரளிதரன் சினம் கொண்ட சிங்கமாக கோபத்தில் கொதித்தெழுந்தார். அந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. பெரும்பாலும் அமைதியாகவே அவர் இருப்பார். அவரது இயல்புக்கு மாறாக இப்படி நடந்து கொண்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

'Why the hell is he bowling full?' என டக்-அவுட்டில் அமர்ந்திருந்தவர் கோபத்தில் எழுந்து நின்று சத்தம் போட்டுள்ளார் முரளி. பந்தை ஜான்சன் ஏன் ஃபுல்லாக வீசுகிறார் என அவர் கேட்டிருந்தார். அந்த காட்சிதான் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களிலும் இது பலரது கவனத்தை ஈர்த்திருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in