ரியான் பராக் அபாரமான ஆட்டம்: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்சன் பாராட்டு

ரியான் பராக் அபாரமான ஆட்டம்: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்சன் பாராட்டு
Updated on
1 min read

புனே: புனேவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 39-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வென்றது.

முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பெங்களூரு அணி, 19.3 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது.

ராஜஸ்தான் அணியில் ரியான் பராக் 31 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வெற்றி பெற்ற அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறும்போது, “இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் முக்கிய விக்கெட்களை இழந்தோம். இருந்தபோதும் தனியொரு ஆளாகப் போராடி 56 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை ரியான் பராக் வெளிப்படுத்தினார். மேலும் ஃபீல்டிங்கின்போது 4 கேட்ச்களையும் பிடித்தார். தான் ஒரு சிறந்த வீரர் என்பதை இந்த உலகுக்கு காட்டினார்" என்றார்.

பெங்களூரு அணி கேப்டன் டூபிளெசிஸ் கூறும்போது, “எதிரணியை இன்னும் 20 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். மேலும் ஃபீல்டிங்கின்போது பல கேட்ச்களை நாங்கள் தவறவிட்டோம். தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக வெளியாட தவறினர்" என்றார்.

இந்த போட்டியில் 3 விக்கெட்களைக் கைப்பற்றி ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்களை எடுத்த வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in