Published : 27 Apr 2022 08:09 AM
Last Updated : 27 Apr 2022 08:09 AM
மணிலா: ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
பிலிப்பைன்ஸ் மணிலா நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடியானது தாய்லாந்தின் அபிலுக் கேடராஹோங், நாச்சனோன் துலாமோக் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
27 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. 2-வது சுற்றில் சாட்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பானின் அகிரோ கோகா, தைசி சைடோ ஜோடியை எதிர்கொள்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் இஷான் பட்னாகர், தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-15, 21-17என்ற நேர் செட் கணக்கில் ஹாங்காங்கின் லா செயுக் ஹிம், யங் நா டிங் ஜோடியை வீழ்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT