

உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி அரையிறுதியில் நடப்பு சாம் பியனான சீனாவிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
சீனாவின் ஹூன்ஷான் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோரும், இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா-ஷிக்கி ரெட்டி ஜோடியும் தோல்வியை தழுவியது.
நேற்று முன்தினம் காலிறு தியில் தாய்லாந்தை இந்திய அணி வீழ்த்தியிருந்தால் வெண் கலப் பதக்கம் உறுதி செய்யப் பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற அரையிறுதியில் 13 முறை பட்டம் வென்ற சீனாவை இந்திய அணி வீழ்த்தி வரலாற்று சாதனை படைக் கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது கனவானது.
இந்திய நட்சத்திர வீராங்கனை யான சாய்னா நெவால் 15-21, 21-12, 17-21 என்ற செட் கணக்கில் 1 மணி நேரம் 4 நிமிடங்கள் போராடி சீனாவின் லியிடம் தோல்வி கண்டார். சர்வதேச போட்டிகளில் லியிடம் சாய்னா தோல்வியை சந்திப்பது இது 8-வது முறை யாகும்.
இரண்டாவது ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பி.வி.சிந்து, சிக்ஸியான் வாங்கை எதிர் கொண்டார். 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 13-21, 21-23 என்ற நேர்ட்செட்டில் தோல்வியடைந்தார்.
சீனா 2-0 என முன்னிலைப் பெற்ற நிலையில் 3-வதாக நடை பெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்திலும் இந்தியாவுக்கு வெற்றி கிட்டவில்லை. ஜூவாலா கட்டா-ஷிக்கி ரெட்டி ஜோடி 6-21, 6-21 என்ற நேர் செட்டில் மிக எளிதாக சீனாவின் டியான் குயிங்-யன் லி ஜோடியிடம் 25 நிமிடங்களில் சரணடைந்தது.
உபேர் கோப்பையில் இந்திய அணி இதுவரை அரையிறுதியை தாண்டியதில்லை. அதுவும் டெல்லியில் கடந்த 2014-ல் நடைபெற்ற போட்டியில்தான் இந்தியா வெண்கலம் வென்றிருந் தது. தற்போது 2-வது முறையாக வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.