Published : 25 Apr 2022 09:38 PM
Last Updated : 25 Apr 2022 09:38 PM

IPL 2022 | CSK vs PBKS: பேட்டிங்கில் மிரட்டிய தவான்; சென்னைக்கு 188 ரன்கள் இலக்கு

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 38-வது லீக் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா, பவுலிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க், 21 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து பனுகா ராஜபக்சே பேட் செய்ய வந்தார்.

தவான் மற்றும் ராஜபக்சே இணை 110 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கடந்த சில போட்டிகளாக இது மாதிரியான ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியாமல்தான் தடுமாறி வந்தது பஞ்சாப். ராஜபக்சே 32 பந்துகளை எதிர்கொண்டு 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் விளையாடிய தவான் 59 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். இறுதி வரை அவர் அவுட்டாகாமல் விளையாடினார். அதோடு ஐபிஎல் கிரிக்கெட்டில் 6,000 ரன்களை கடந்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

லிவிங்ஸ்டன், தன் பங்கிற்கு 7 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார். டெத் ஓவர்களில் சென்னை பவுலர்களை தனது பேட்டிங் மூலம் மிரட்டினார் அவர். பேர்ஸ்டோ 6 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி. சென்னை இந்தப் போட்டியில் வெற்றி பெற 188 ரன்கள் தேவை. சென்னை அணியில் பிராவோ (2), தீக்சனா (1) விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x