Published : 23 Apr 2022 06:23 AM
Last Updated : 23 Apr 2022 06:23 AM
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் தோனி மட்டும் அந்த ஓவரில் 16 ரன்கள் சேர்த்து வெற்றி தேடிக்கொடுத்தார். 13 பந்துகளை சந்தித்த தோனி 28 ரன்களை விளாசியிருந்தார்.
போட்டி முடிவடைந்ததும் சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா கூறும்போது, “அவர் இன்னும் ரன்கள் மற்றும் வெற்றிகளுக்காக பசியுடன் இருப்பது மிகவும் நல்லது. மட்டையுடன் அவருக்கு இன்னும் தொடர்பு உள்ளது. அவர் களத்தில் இருந்தால், அதிலும் கடைசி ஓவர் வரை இருந்தால் அணியை வெற்றி பெற வைத்து விடுவார்.
நாங்கள் பதற்றமாக இருந்தோம். ஆனால் தோனி களத்தில் இருந்ததால் ஆட்டத்தை முடித்துவிட்டு வருவார் என்ற நம்பிக்கை இருந்தது. அவர், இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரிலும் பல ஆட்டங்களை வென்றுகொடுத்துள்ளார். போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கக்கூடிய உலகின் சிறந்த வீரரான தோனி, களத்தில் இருக்கும் போது இரு அணிகளுக்குமே பதற்றம் இருக்கும்.
கடைசி பந்து வரை தோனி களத்தில் நின்றால், நிச்சயமாக அவர் எங்களுக்காக ஆட்டத்தை வெல்வார் என்பது எங்களுக்குத் தெரியும். கடைசி இரண்டு மூன்று பந்துகளை அவர், தவறவிடமாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது, அதிர்ஷ்டவசமாக அது நடந்தது” என்றார்.
குஜராத் – கொல்கத்தா
நேரம்: பிற்பகல் 3.30
பெங்களூரு – ஹைதராபாத்
நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT