Last Updated : 16 May, 2016 09:22 AM

 

Published : 16 May 2016 09:22 AM
Last Updated : 16 May 2016 09:22 AM

ஸ்குவாஷ்: இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

தைபே நகரில் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெண்களுக்கான குழு பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவை எதிர்த்து ஆடியது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சஜிகா 7 11 6 11 10 12 என்ற நேர் செட்களில் மலேசியாவின் சிவசங்கரி சுப்பிரமணியத்திடம் தோற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான ஜோஸ்னா சின்னப்பா, மலேசியாவின் டெலியா அர்னால்டிடம் 9 11, 13 11, 11 8, 11 9 என்ற கணக்கில் போராடி தோற்றார். இதன் மூலம் மலேசிய அணி 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் தோற்ற இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x