அமெரிக்கா | விமானத்தில் இம்சித்த சக பயணிக்கு 'பஞ்ச்' கொடுத்த மைக் டைசன்

மைக் டைசன் (கோப்புப்படம்).
மைக் டைசன் (கோப்புப்படம்).
Updated on
1 min read

சான் பிரான்சிஸ்கோ: விமானத்தில் தன்னுடன் பயணிக்க இருந்த சக பயணி ஒருவருக்கு 'குத்து' விட்டுள்ளார், பிரபல தொழில்முறை குத்துச்சண்டை வீரரான மைக் டைசன்.

அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் 55 வயதான மைக் டைசன். 1985 முதல் 2005 வரையில் சுமார் 20 ஆண்டு காலம் பாக்சிங் ரிங்கை ஆண்ட அரசனாக வலம் வந்தவர். 5 அடி 10 அங்குலம் உயரம் கொண்ட டைசன், சர்வதேச அளவில் மொத்தம் 58 போட்டிகளில் விளையாடியவர். அதில் 50 வெற்றிகளை பெற்றுள்ளார். 6 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளார். 2 போட்டிகள் நடைபெறவில்லை. 50 வெற்றிகளில் 44 வெற்றிகளை நாக்-அவுட் முறையில் வென்றவர். அவர் வென்ற முதல் 19 வெற்றிகள் நாக்-அவுட்டில் கிடைத்தவை. அதில் 12 வெற்றி முதல் ரவுண்டில் அவருக்கு கிடைத்த வெற்றிகளாகும்.

இப்படி தான் சார்ந்த விளையாட்டில் சாம்ராட்டாக விளங்கியவர் டைசன். அவரது புகழுக்கு நிகராக அவரது வாழ்வில் சர்ச்சைகளும் நிறைந்திருக்கும். இத்தகைய சூழலில் அவரது அண்மைய செயல் ஒன்று மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து புளோரிடாவுக்கு செல்லும் விமானத்தில் பயணிக்க திட்டமிட்டிருந்தார் டைசன். அதன்படி அவர் அந்த விமானத்தில் தனது பயணத்தை தொடங்க இருந்தார். அப்போது டைசனை பார்த்த பயணிகள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். இதில் டைசனுக்கு பின் சீட்டில் அமர்ந்து கொண்டிருந்த பயணி ஒருவர் தொடர்ந்து அவருக்கு இம்சை கொடுத்து வந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அந்த இம்சைகளை சகித்துக்கொள்ள முடியாமல் கோபத்தில் எழுந்து, அந்த பயணிக்கு பஞ்ச் கொடுத்துள்ளார் டைசன்.

அந்தக் காட்சிகள் தற்போது வைரலாக உலகம் முழுவதும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் கடந்த 20ம் தேதியன்று நடைபெற்றுள்ளது. விமானம் புளோரிடா புறப்படுவதற்கு முன்னதாகவே பயணத்தை ரத்து செய்து கொண்டு, அங்கிருந்து புறப்பட்டுள்ளார் டைசன். அந்தப் பயணியின் நெற்றியில் இருந்து ரத்தம் வடிந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பாக்சிங் தொடர்பான கதைக்களம் கொண்ட 'லிகர்' திரைப்படத்தில் கவுரவ தோற்றத்தில் டைசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in