IPL 2022 | கடைசி ஓவரும் தோனி எனும் பினிஷரும் - இது ஐபிஎல் வரலாறு!

மகேந்திர சிங் தோனி.
மகேந்திர சிங் தோனி.
Updated on
1 min read

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட் உலகின் தலை சிறந்த பினிஷர்களில் ஒருவராக அறியப்படுபவர். அதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் களம் தொடங்கி டொமஸ்டிக் கிரிக்கெட் களம் வரை தனது அணிக்காக கிரீஸில் கடைசி வரை இருந்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தவர் தோனி. 2011 - 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவரது இன்னிங்ஸை அதற்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். உலகின் சிறந்த பவுலர்களின் பந்துவீச்சை இறுதி ஓவரில் தெறிக்கவிடுபவர். அப்படி ஒரு சம்பவத்தை தான் நடப்பு ஐபிஎல் சீசனில் நேற்று மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் செய்திருந்தார் 'தல' தோனி.

இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 4 பந்துகளை எதிர்கொண்டு 16 ரன்களை எடுத்திருந்தார். 6, 4, 2, 4 என முறையே ஒவ்வொரு பந்திலும் ரன்களை சேர்த்திருந்தார் அவர். அதன் மூலம் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் கடைசி ஓவரும் தோனியும்!

ஐபிஎல் களத்தில் கடைசி ஓவரான 20வது ஓவர்களில் மட்டும் 643 ரன்களை சேர்த்துள்ளார் தோனி. மொத்தம் 261 பந்துகளை இறுதி ஓவர்களில் அவர் எதிர்கொண்டுள்ளார். 51 சிக்சர்கள், 48 பவுண்டரிகள் இதில் அடங்கும். இறுதி ஓவர்களில் அவரது ஸ்ட்ரைட் ரேட் 246.36.

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை எதிரணிக்கு எதிராக அவர் பயன்படுத்தும் பிரம்மாஸ்திரம் என சொல்லலாம். அவர் அந்த அஸ்திரத்தை பயன்படுத்தக் கூடாது எனதான் அவருக்கு எதிராக பந்து வீசும் பவுலர்கள் எண்ணுவார்கள். அதற்கு ஏற்றார்போல அந்த ஷாட்டை தோனி ஆட முடியாத வகையில் அவருக்கு பந்து வீசும் பவுலர்களும் உண்டு. இருந்தாலும் தனது பேட்டிங் திறனால் அந்த தடைகளை தகர்க்கும் வல்லமை கொண்டவர் தோனி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in