Last Updated : 17 May, 2016 11:15 AM

 

Published : 17 May 2016 11:15 AM
Last Updated : 17 May 2016 11:15 AM

இந்திய அணிக்கு திராவிட் மகத்தான பயிற்சியாளராகத் திகழ்வார்: ரிக்கி பாண்டிங்

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக ராகுல் திராவிட்தா சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பையில் அவர் இதுகுறித்து கூறும்போது, “இது நான் எடுக்கக் கூடிய முடிவல்ல, பிசிசிஐ என்ன எதிர்பார்க்கிறது என்பதை பொறுத்த விஷயம். அதாவது இந்தியப் பயிற்சியாளரைப் பார்க்கின்றனரா, அல்லது அயல்நாட்டுப் பயிற்சியாளரிடம் பொறுப்பை ஒப்படைப்பார்களா என்பது தெரியவில்லை, ஆனாலு ராகுல் திராவிட் போன்ற வேறொரு வீரரை பிசிசிஐ நிச்சயம் காண முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

திராவிட் இந்தப் பொறுப்புக்கு ஆர்வம் காட்டினார் என்றால் நிச்சயம் அவர் சிறந்த பயிற்சியாளரகவே இருப்பார். அவரிடம் அதற்கான அறிவும் திறமையும் உள்ளது, 3 வடிவ கிரிக்கெட் ஆட்டங்களையும் நன்கு புரிந்து வைத்திருப்பவர், நல்ல அனுபவசாலி.

உண்மையில் அவர் ஒரு மகத்தான பயிற்சியாளராகத் திகழ்வார். ஆனால் பிசிசிஐ என்ன நினைக்கிறது என்பதைப் பொறுத்தும் கேப்டன் என்ன விரும்புகிறார் என்பதைப் பொறுத்தும் அமையக்கூடிய விஷயம் இது. டெஸ்ட் அணியைப் பொறுத்தவரையில் விராட் கோலி என்ன விரும்புகிறாரோ பிசிசிஐ அதனை நிச்சயம் உற்று கவனிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x