

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார் சிஎஸ்கே வீரர் ஆடம் மில்ன். அணியில் அவருக்கு மாற்று வீரராக அணியில் இணைந்துள்ளார் இலங்கையின் மதீஷா பதிரனா.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் 1.9 கோடி ரூபாய்க்கு அவரை வாங்கியிருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். நடப்பு சீசனில் ஒரே ஒரு போட்டியில் விளையாடிய அவர் காயம் காரணமாக தற்போது விலகியுள்ளார். இது அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே மில்ன் விளையாடி இருந்தார்.
அவருக்கு மாற்றாக 19 வயதான இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் மதீஷா பதிரனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் 2022 அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 2021 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் ரிசர்வ் வீரராக விளையாடியவர் பதிரனா.
புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் நடப்பு சீசனில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்கிறது.
Welcome Matheesha Pathirana, the Young pace