'எங்கள் கேப்டன்' | டூப்ளஸ்சிக்கு மாற்றாக கேப்டனான கோலி; ரியாக்ட் செய்த ரசிகர்கள்

விராட் கோலி.
விராட் கோலி.
Updated on
1 min read

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெங்களூரு கேப்டன் டூப்ளஸ்சிக்கு மாற்றாக களத்தில் சிறிது நேரம் கேப்டன்சி பணியை கவனித்தார் முன்னாள் கேப்டன் விராட் கோலி. அதனை கவனித்த ரசிகர்கள் அதற்கு அமோக வரவேற்பு தெரிவித்து ட்விட்டரில் ரியாக்ட் செய்துள்ளனர்.

சர்வதேச களத்தில் இந்திய கிரிக்கெட் அணியையும், ஐபிஎல் களத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும் கேப்டனாக வழிநடத்தி வந்தவர் கோலி. இருந்தாலும் கடந்த ஆண்டோடு அந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் அவர். அது குறித்த அறிவிப்பில், நண்பர்கள், குடும்பத்தினர், நலன் விரும்பிகள் எனப் பலரிடம் பேசிய பிறகே இந்த முடிவை எடுத்ததாக கோலி சொல்லியிருந்தார்.

தற்போது அவர் கிரிக்கெட் களத்தில் அதிகம் விளையாடிய அனுபவ வீரர் என்ற ரோலில் கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சில ஓவர்கள் பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளஸ்சிக்கு மாற்றாக கேப்டனாக செயல்பட்டார். டூப்ளஸ்சி கடைசி ஓவர் வரை பேட் செய்திருந்தார். அதனால் அவர் முதல் இரண்டு ஓவர்கள் ஒய்வு எடுத்துக் கொண்டார். அதனை கவனித்த ரசிகர்கள் கேஜிஎஃப் படத்தில் பேசப்படும் வசனம் போல உற்சாக மிகுதியில் ட்விட்டர் தளத்தில் ரியாக்ட் செய்திருந்தனர்.

ஐபிஎல் களத்தில் கோலி தலைமையில் பெங்களூரு அணி மூன்று முறை பிளே ஆஃப் சுற்றுக்கும், ஒருமுறை இரண்டாவது இடத்திலும் சீசனை நிறைவு செய்துள்ளது. 2020 மற்றும் 2021 என முந்தைய இரண்டு சீசனிலும் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் ட்வீட்கள் இங்கே…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in