டி 20 கிரிக்கெட்: பாகிஸ்தான் கேப்டனாக சர்பிராஸ் அகமது நியமனம்

டி 20 கிரிக்கெட்: பாகிஸ்தான் கேப்டனாக சர்பிராஸ் அகமது நியமனம்
Updated on
1 min read

பாகிஸ்தான் டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்பிராஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி அரையிறுதிச் சுற்றுக்குக் கூட முன்னேற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அப்ரீடி விலகினார். இந்நிலையில் பாகிஸ்தான் டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்பிராஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக மிஸ்பா உல் ஹக்கும், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அசார் அலியும் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

28 வயதான சர்பிராஸ் அகமது தற்போது பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். 21 டி 20 போட்டிகளிலும், 58 ஒருநாள் போட்டிகளிலும், 21 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.

கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட் டது குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்பிராஸ் அகமது, “பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப் பட்டதை பெருமையாக கருதுகி றேன். டி 20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை மீண்டும் முன்னணிக்கு கொண்டுவர பாடுபடு வேன்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in